தி.மு.க., த.மா.கா.உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்

தி.மு.க., த.மா.கா.உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்

மார்ஷல் நேசமணியின் பேரன், தி.மு.க. மாநில மகளிரணி துணை செயலாளர் உள்பட தி.மு.க., தமிழ்மாநில காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அக்கட்சிகளில் இருந்து விலகி, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு முதலமைச்சர், கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி வரவேற்றார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை, தி.மு.க.வைச் சேர்ந்த மாநில பிரச்சாரக்குழு செயலாளரும், அருள்மிகு வடபழனி முருகன் திருக்கோயில் முன்னாள் அறங்காவலருமான திருமதி எஸ்.கண்மணி, தி.மு.க.வைச் சேர்ந்த மாநில மகளிர் அணி துணைச் செயலாளரும், திருவாரூர் நகர மன்ற முன்னாள் தலைவருமான திருமதி G.விஜயகுமாரி, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றிய முன்னாள் தி.மு.க. செயலாளரும், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் போளூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டவருமான திரு.சி.ஏழுமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான திரு.இ.செந்தில்குமார், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் வழக்கறிஞர் இமாலயா கே.அருண்பிரசாத், குமரித்தந்தை மார்ஷல் நேசமணியின் பேரன் திரு.W.ரெஞ்சித் அப்போலஸ் நேசமணி, திரு.எம்.கேதீஸ்வரன் என்கிற நகைச்சுவை நடிகர் போண்டாமணி, சென்னை தியாகராயநகர் லட்சுமி காலனியைச் சேர்ந்த திரு.எம்.அக்ஷைமுரளி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தவர்களுக்கு, கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி வரவேற்றார். தங்களை கழகத்தில் இணைத்துக்கொண்டதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை, கழகத்தில் இணைந்தவர்கள் தெரிவித்துக்கொண்டனர்.