தீபா, தீபக் இருவரும் யாரென்று எனக்கு தெரியாது : தம்பிதுரை

தீபா, தீபக் இருவரும் யாரென்று எனக்கு தெரியாது : தம்பிதுரை

திங்கட்கிழமை, பிப்ரவரி 27, 2017,

சென்னை : ”தீபா யாரென்று எனக்கு தெரியாது,” என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன் நிருபர்களிடம் பேசுகையில், ‘தீபக்கா யாரது, அ.தி.மு.க.,வில் இருக்கிறாரா… எனக்கு அவரை பற்றி தெரியாது’ என தம்பிதுரை கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று சென்னை விமான நிலையம் வந்த தம்பிதுரையிடம், ‘எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை’ என்ற, அரசியல் அமைப்பை, ஜெ., அண்ணன் மகள் தீபா துவக்கி உள்ளது குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர் , ”தீபாவா… அவரை யாரென்றே எனக்கு தெரியாது; அரசியலில் இருந்தாரா என்றும் தெரியாது. கட்சி ஆரம்பிக்கிறது அவங்க அவங்க உரிமை என்றார்.