தூத்துக்குடியில், இயந்திரத்தால் ஆன தீப்பெட்டி உற்பத்தி மையம் அமைத்துக் கொடுத்த கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தீப்பெட்டி தொழிலாளர்கள் நன்றி

தூத்துக்குடியில், இயந்திரத்தால் ஆன தீப்பெட்டி உற்பத்தி மையம் அமைத்துக் கொடுத்த கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தீப்பெட்டி தொழிலாளர்கள் நன்றி

சனி, மார்ச் 05,2016,

தூத்துக்குடியில், இயந்திரத்தால் ஆன தீப்பெட்டி உற்பத்தி மையம் அமைத்துக் கொடுத்த, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தீப்பெட்டி தொழிலாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ஏராளமான தொழிலாளர்கள் வீடுகளில் இருந்தே தீக்குச்சிக்கான அட்டைபெட்டி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கைகளினால் அட்டைபெட்டி தயாரிப்பதில் குறைந்த வருமானமே கிடைத்து வந்தது. இவர்களின் குறையை களையும் வகையில், மாவட்ட அரசு தொழில் மையம் மூலம் இயந்திரத்தால் அட்டை பெட்டி தயாரிக்கும் உற்பத்தி மையம் அமைக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர் திரு. S.P. சண்முகநாதன் திறந்து வைத்தார். இதன்மூலம் சுமார் 300 தொழிலாளர்கள் பயன்பெறுவர். தீப்பெட்டி உற்பத்தி மையம் அமைத்துக் கொடுத்த முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு, தொழிலாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.