தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசி மற்றும் பருத்தி பயிர்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசி மற்றும் பருத்தி பயிர்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசி மற்றும் பருத்தி நடவு செய்துள்ள விவசாயிகள், பயிர்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரத்தில் வேளாண்துறையினரின் ஆலோசனையின் பேரில் 800 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் உளுந்து, பாசி மற்றும் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். நடவு செய்த சில நாட்களிலேயே பயிருக்குத் தேவையான நீர் கிடைக்கும் வகையில், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதாலும், அரசின் சால்பில் உரம், பூச்சி மருந்து போன்றவை தட்டுப்பாடின்றி வழங்கப்படுவதாலும் பயிர்கள் நல்ல விளைச்சல் காணும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags: Latest News