தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சரின் திருமண உதவித் திட்டத்தில் 22 ஆயிரம் பெண்களுக்கு 89 கிலோ தாலிக்கு தங்கம் மற்றும் 79 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி சாதனை!

தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சரின் திருமண உதவித் திட்டத்தில் 22 ஆயிரம் பெண்களுக்கு 89 கிலோ தாலிக்கு தங்கம் மற்றும் 79 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி சாதனை!

புதன், பெப்ரவரி 17,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உன்னத திட்டங்கள் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், திருமண உதவித் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரம் பெண்களுக்கு 89 கிலோ தாலிக்கு தங்கம் மற்றும் 79 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்கள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர், திருமண உதவித் திட்டத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கி வருகிறார். இதன் அடிப்படையில், 12-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 4 கிராம் தாலிக்கு தங்கம், 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 4 கிராம் தங்கத்துடன், 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 22 ஆயிரத்து 199 பெண்களுக்கு 88 ஆயிரத்து 796 கிலோகிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிதியுதவியாக 79 கோடியே 25 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட மணமக்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.