தூத்துக்குடி மாவட்ட கிராமப்புற பெண்களுக்கு கட்டணமில்லா ஆடை வடிவமைப்பு பயிற்சி வழங்க ஆணையிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி

தூத்துக்குடி மாவட்ட கிராமப்புற பெண்களுக்கு கட்டணமில்லா ஆடை வடிவமைப்பு பயிற்சி வழங்க ஆணையிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி

வெள்ளி, டிசம்பர் 25,

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தில் கிராமபுற பெண்களுக்கு கட்டணமில்லா ஆடை வடிவமைப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் பெண்களின் சுயமுன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். ஒட்டபிடாரத்தில் உள்ள கிராமப்புற ஏழைப்பெண்கள் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் இலவசமாக ஆடை வடிமைப்பு பயற்சி அளிக்கப்படுகிறது. ஒருமாத காலம் நடைபெறும் இந்த பயிற்சியில் 30 பெண்கள் பங்கேற்றுள்ளனர். இலவச பயிற்சி நிறைவடைந்தவுடன் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. வீட்டிலிருந்தே சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் வகையில், இந்த பயிற்சி வழங்க ஆணையிட்ட, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.