தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

செவ்வாய், டிசம்பர் 15,2015,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வைப்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டதால், மழைநீர் கடலுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் முதலமைச்சருக்கு தங்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வரும் வைப்பாற்றின் குருக்கே தடுப்பணை கட்ட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதனையடுத்து, அங்கு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதன் பலனாக சமீபத்தில் பெய்த மழையினால் பெருகிய நீர் வீணாக கடலில் சென்று கலக்காமல் தடுக்கப்பட்டுள்ளதுடன், அணையும் நிரம்பியுள்ளது. இதனால் தற்போது விவசாயத் தொழிலில் ஈடுபடும் ஆர்வத்தில், வெளியூரில் தங்கியிருந்த பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் பலரும் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே, பள்ளமடை கிராமத்தில் உள்ள பெரிய குளம் மூலம், பள்ளிக்கோட்டை, நெல்லைதிருத்து, தென்கலம்புதூர் உள்ளிட்ட 7 கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில், அண்மையில் பெய்த கனமழை காரணமாக, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பெரியகுளத்தில் தண்ணீர் மறுகால் விழுவதால், அங்குள்ள 7 கிராமங்களில் விவசாயப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 9 ஆண்டுகளுக்குப் பிறகு மறுகால் விழுந்திருப்பதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முதலமைச்சர் ஜெயலலிதா உரிய நேரத்தில் மேற்கொண்ட தூர்வாறும் பணிகளால், தற்போது கூடுதலாக தண்ணீர் வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய சடையம்பாளையத்தில், 6 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு குளத்தில் தற்போது 580 லட்சம் லிட்டர் நீர் சேகரிக்கப்படுவதால், அந்த பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.

இதேபோல், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி தொட்டமுதுகரை கிராமத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மலைப்பகுதி தடுப்பணையால், அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.