தொற்றுநோய்களைத் தடுக்க, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு – தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்க படுகிறது

தொற்றுநோய்களைத் தடுக்க, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு – தமிழகம் முழுவதும்  பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்க படுகிறது

சனி,நவம்பர்,28-2015

மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் அளிக்கப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் நிலவேம்புக் குடிநீரை பருகினர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவில் இருந்து மாவட்டம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நிலவேம்பு பாக்கெட் போதிய அளவு அனுப்பி வைக்கப்படுவதுடன், நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க நிலவேம்புக் குடிநீர் வழங்கி வரும் முதலமைச்சருக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நாகை பூம்புகார் தொகுதிக்குட்பட்ட இளையாளுரில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வடகரையில் சிறப்பு சித்த மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

வேலூர் மாநகரில் உள்ள முத்துமண்டபம், அம்பேத்கர் நகர் பகுதிகளில் வேலூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மாநகராட்சி மேயர் திருமதி. கார்த்தியாயினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், கே.வி.குப்பம் பகுதி மற்றும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தொகுதிக்குட்பட்ட திருவத்திபுரம் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. முக்கூர் என். சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.