தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் விருப்பமனு, 20-ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் விருப்பமனு, 20-ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , ஜனவரி 18,2016,

சென்னை : சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 20-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை தங்களது விருப்பமனுக்களை தாக்கல் செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வரும் 20-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு செய்பவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து அதிமுக பொருளாளரும், நிதித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் மேலான அறிவிப்பிற்கு இணங்க, நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில், அதிமுக சார்பில் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை போட்டியிட விரும்புவர்கள் பெற்றுக் கொள்ளலாம். விருப்ப மனு கட்டணமாக தமிழகத்திற்கு ரூபாய் 11,000 , புதுச்சேரிக்கு ரூபாய் 5,000, கேரளாவிற்கு ரூபாய் 2,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.