தேர்தல் நேரத்தில், கொடி தோரணம் கட்டுபவர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் தான் விஜயகாந்துக்கும் இருக்கிறது : நடிகர் ராதாரவி பேச்சு

தேர்தல் நேரத்தில், கொடி தோரணம் கட்டுபவர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் தான் விஜயகாந்துக்கும் இருக்கிறது : நடிகர் ராதாரவி பேச்சு

புதன், மார்ச் 09,2016,

தேர்தல் நேரத்தில் மைக்செட்காரர்கள், மேடை போடுபவர்கள், கொடி தோரணம் கட்டுபவர்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்குமோ அதே அளவு முக்கியத்துவம் தான் விஜயகாந்துக்கும் இருக்கிறது என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆதரவாளரான நடிகர் ராதாரவி பழனிக்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். செய்தியாளர்கள் அவரிடம் தேர்தல் கூட்டணி, பிரச்சாரம் பற்றி கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், கடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை எல்லாம் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது.

இது தவிர அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என பல நலத்திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார். இதனால் வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது தேர்தல் பிரசாரத்திற்கு அதிமுக தலைமை அழைத்தால் நிச்சயம் அந்த பணியை செய்வேன். மக்கள் நல கூட்டணியில் உள்ள திருமாவளவன் திராவிடக் கட்சிகளை ஒழிப்பேன் என்று கூறிவருகிறார். அப்படி என்றால் மதிமுக திராவிடக் கட்சி இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.