தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் மார்க்சிஸ்ட் கேள்விக்கு அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பதில்

தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் மார்க்சிஸ்ட் கேள்விக்கு அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பதில்

சனி, பெப்ரவரி 20,2016,

தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் கையிருப்பில் உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் அ.சௌந்தரராஜன் பேசியபோது, மிகையான மின்சாரம் இருக்குமானால் அண்டை மாநிலங்களுக்கு வழங்கலாமே என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதில்:
தமிழகம் மின்சாரத்தில் மிகை மின் மாநிலமாகவே உள்ளது. நமது உற்பத்தி நிலையங்களில் உள்ள கருவிகளில் ஏதேனும் பழுது ஏற்படுமானால் அப்போது உற்பத்தி பாதிக்கப்படும். அந்தச் சூழ்நிலைகளில் பற்றாக்குறை ஏற்படாமல் மிகையாக உள்ள மின்சாரத்தை வைத்துச் சமாளிக்க முடியும்.
கர்நாடக மாநிலத்தில் இருந்துகூட ஒரு மாதத்துக்கு முன்பு மிகையான மின்சாரத்தை தர வேண்டும் என்று கோரினர். ஆனால், நமது நிலையை அவர்களிடம் தெரிவித்தோம் என்றார் நத்தம் விஸ்வநாதன்.