தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வு – அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்பு

தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வு – அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்பு

செவ்வாய், டிசம்பர் 01,2015,

தென் மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. நத்தம் ஆர். விசுவநாதன், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. P. பழனியப்பன், தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. P. தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. S.P. வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் திரு. R.B. உதயகுமார், அரசு தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு. கே. சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் திரு. அதுல்யமிஸ்ரா, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் N.S. பழனியப்பன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் திரு. ராஜீவ் ரஞ்சன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு. க. பணீந்திர ரெட்டி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர் திரு. ஆர். வெங்கடேசன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் எம். சாய்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.