தொழில்துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு

தொழில்துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு

வெள்ளி, ஏப்ரல் 29,2016,

 தொழில் துறையில் தமிழகம் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும்,அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்க, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை எளிதில் அணுக முடிவதாக, மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், தமிழகம் தொழில் வளர்ச்சியில் எப்பொழுதும் முன்னிலையில் இருந்துவருவதாக, இதனால்தான் இங்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த முடிந்ததாகவும் தெரிவித்தார். வர்த்தக அமைச்சகத்தை பொறுத்தவரை, மத்திய, மாநில அரசுகளிடையே எப்பொழுதுமே இனக்கமான சூழல் இருந்துவருவதாக குறிப்பிட்ட மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்க, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை எளிதில் அணுக முடிவதாகவும் தெரிவித்தார்.