நடப்பாண்டில் ரூ.350 கோடியில் 75 தடுப்பணைகள் கட்டப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நடப்பாண்டில் ரூ.350 கோடியில் 75 தடுப்பணைகள் கட்டப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூன் , 29 ,2017 ,வியாழக்கிழமை,

சென்னை : தமிழகத்தில் நடப்பாண்டில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 75 இடங்களில் தடுப்பணைகள், அணைக்கட்டுகள் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தின்போது பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் நடப்பாண்டில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 75 இடங்களில் தடுப்பணைகள், அணைக்கட்டுகள் கட்டப்படும் – திருவள்ளூர், வேலூர், கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 9 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும் – காரமடை மற்றும் அன்னூர் நகருக்கு புறவழிச்சாலை அமைக்க 185 கோடி ரூபாய் ஒதுக்கீடு – மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி சாலையில் பல்லடுக்கு மேம்பாலம் கட்ட 214 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.