நதிநீர் பிரச்சனைகளில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ; வைகோ பாராட்டு

நதிநீர் பிரச்சனைகளில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ; வைகோ பாராட்டு

சனி, நவம்பர் 05,2016,

நதிநீர் விவகாரங்களில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு தமிழக நலன்களை பாதுகாத்து கொடுத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என திரு.வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு இன்று  பேட்டியளித்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ,

காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடகா தொடர்ந்து வஞ்சகம் செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார். சட்ட ரீதியாக தமிழக நதிநீர் விவகாரங்களில் முறையாக நடவடிக்கை எடுத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.