நாகூர் தர்கா குளம் தூர்வாரப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டுக்கு திறப்பு : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நன்றி

நாகூர் தர்கா குளம் தூர்வாரப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டுக்கு திறப்பு : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் நன்றி

வெள்ளி, ஜனவரி 01,2016,

நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாகூர் தர்கா குளம் தூர்வாரப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டிருப்பதையடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

நாகூரில் அமைந்திருக்கும் தர்கா, உலகப் புகழ் பெற்றதாகும். தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மொழி, மதம் கடந்து ஏராளமானோர் இந்த தர்காவிற்கு வருகை தருகின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற தர்காவின் பின்புறத்தில் அமைந்துள்ள குளம், கடந்த பல வருடங்களாக தூர் வாரப்படாமல் மிகவும் சீர்கேடு அடைந்திருந்தது. இதனால், தர்காவிற்கு வருவோர் அதனை பயன்படுத்த நிலை இருந்து வந்தது. எனவே அதனை தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழக அரசு சார்பில் 30 லட்சம் ரூபாயும், தர்கா நிர்வாகம் சார்பில் 15 லட்சம் ரூபாயும் என 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்திருப்பதையடுத்து, இக்குளம் புத்தம் புதிதாய் பொலிவுடன் திகழ்கிறது. இதற்கு நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தர்காவிற்கு வரும் பலரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.