நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் – முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் – முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில், அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை

23 november 2015

வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளதை முன்னிட்டு, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, கழக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத் தொடரில் தமிழக நலன் குறித்து எடுத்துரைக்க வேண்டிய கருத்துகள் குறித்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.