நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மூன்று பேர் நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மூன்று பேர் நீக்கம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, ஜூன் 04,2016,

நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மூன்று பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நேற்று நீக்கப்பட்டனர்.
 இதுகுறித்து, முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
 நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஒன்றியச் செயலர் பி.பி.சாமிநாதன், காஞ்சிபுரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் புல்லட் கே.பரிமளம், காஞ்சிபுரம் நகர 6-ஆவது வார்டு செயலாளர் பி.உமா மகேஸ்வரி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகின்றனர்.
 கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப் பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்ட காரணத்தால் அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் யாரும் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.