நில மோசடி வழக்கு – கருணாநிதி மகள் செல்விக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நில மோசடி வழக்கு – கருணாநிதி மகள் செல்விக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

செவ்வாய், ஜூலை 05,

தி.மு.க. ஆட்சியின்போது, சென்னையில் சுமார் மூன்றரை கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதுடன், ஒப்பந்தத்தை மீறி சம்பந்தப்பட்ட நிலத்தை வேறு நபருக்கு விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்விக்கு, நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2007-ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, சென்னையைச் சேர்ந்த திரு.நெடுமாறன் என்பவரிடம் நிலம் விற்பனை தொடர்பாக மூன்றரைக் கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால், ஒப்பந்தப்படி சம்பந்தப்பட்ட நிலத்தை வழங்காமல் வேறு நபருக்கு விற்பனை செய்ததுடன், திரு.நெடுமாறனிடம் பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனையடுத்து, திரு.நெடுமாறன்தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக காவல்துறை தொடர்ந்துள்ள இந்த மேல்முறையீடு வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு.ஜே.எஸ்.கெகர், திரு.அருண்மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள செல்விக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். செல்வியிடம் நோட்டீசை நேரில் வழங்குமாறு காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 4 வார காலத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.