நிவாரணப் பணிகளில் இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை:அதிமுக அறிவிப்பு

நிவாரணப் பணிகளில் இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை:அதிமுக அறிவிப்பு

சனி, டிசம்பர் 05,2015,

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக 044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அதிமுக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் ஒருவர் அளித்த பேட்டியில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு  சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம். 044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

இதுதவிர info@aiadmk.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். அல்லது @aiadmkofficial என்ற ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகவும் புகார்களை தெரிவிக்கலாம்” என்றார்.

தன்னார்வலர்கள் கொண்டு வரும் நிவாரணப் பொருட்களை சில கட்சிகள் பெற்றுக் கொண்டு அதை அவர்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை வழங்குவதாக சமூக வலைதளங்களில் பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனையடுத்து, நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.மேலும், இடையூறு செய்யும் ஆடியோ, வீடியோ பதிவு இருந்தால் அவற்றையும் கட்சி மேலிடத்துக்கு அனுப்பலாம் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.வெள்ள நிவாரண பணியில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டு கொண்டனர்.