நீர்-மோர் பந்தல்கள் அமையுங்கள் : அதிமுகவினருக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள்

நீர்-மோர் பந்தல்கள் அமையுங்கள் : அதிமுகவினருக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, மார்ச் 14, 2017,

சென்னை : கோடைக்காலத்தில் பொது மக்களுக்கு உதவுகிற வகையில் நீர் மோர், தண்ணீர் பந்தல்களை ஆங்காங்கே அமைக்க வேண்டும் என தொண்டர்களுக்கு அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :- கோடை காலத்தின் கொடிய வெப்பத்தை பொது மக்கள் இலகுவாக சமாளிப்பதற்கு, அதி.மு.க.வின் சார்பில் ஆங்காங்கே நீர் மோர், தண்ணீர் பந்தல்களை திறக்க வேண்டும் என ஆண்டு தோறும் ஜெயலலிதா கழகச் சிப்பாய்களுக்கு அன்புக் கட்டளை இடுவார். அதன்படி இவ்வாண்டு கோடைக்காலத்திலும் பொது மக்களுக்கு உதவுகிற வகையில் நீர் மோர், தண்ணீர் பந்தல்களை ஆங்காங்கே அமைத்து தாளாத வெப்பத் தவிப்பிலிருந்து தமிழக மக்களுக்கு இளைப்பாறுதல் தருகின்ற புனிதத் தொண்டுதலை கழகத்தின் அனைத்துப் பிரிவுகளும் களமிறங்கி கனிவோடு செய்திட வேண்டுமாய் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.