நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டதற்கு, திமுகவும், காங்கிரசும் தான் காரணம்:அமைச்சர் தங்கமணி

நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டதற்கு, திமுகவும், காங்கிரசும் தான் காரணம்:அமைச்சர் தங்கமணி

வியாழக்கிழமை, பிப்ரவரி 25, 2016,

பத்திரிகைகளில் வெளிவரும் திமுகவின் பொய் விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள் என்று, தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல்லில் குளக்கரை திடலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் தங்கமணி, 1.8 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டு, இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியது திமுக என்று குற்றம்சாட்டினார்.

பொய் பிரசாரத்தை மக்கள் யாரும் நம்பமாட்டார்கள் என்றும், நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டதற்கு, திமுகவும், காங்கிரசும் தான் காரணம் என்று கூறினார்.

மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிங் மேக்கர் இல்லை என்றும், கூட்டணி குறித்து முடிவடுக்க முடியாமல் திணறி வருபவர் என்றும் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.