சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 92 நடமாடும் மருத்துவமுகாம்கள்:தொற்று நோய் பரவாமல் தடுக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 92 நடமாடும் மருத்துவமுகாம்கள்:தொற்று நோய் பரவாமல் தடுக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

சனி, டிசம்பர் 05,2015,

               சென்னை, மழையினால் தொற்று நோய் பரவாமல் இருக்க முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயக்கப்படும் 92 நடமாடும் வெள்ள நிவாரண மருத்துவ குழுக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் பார்வையிட்டார்.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு

தமிழ்நாட்டில் தற்பொழுது பெயது வரும் வடகிழக்க பருவமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோய்கள் வராமலிருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி நேற்று முதல் 92 நடமாடும் வெள்ள நிவாரண மருத்துவ குழுக்கள் அனுப்பப்படவுள்ளது. இக்குழுக்கள் தமிழ்நாட்டின் உள்ள பிற மாவட்டங்களான மதுரை, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மருத்துவக் குழுவிலும் தலா ஒரு மருத்துவ அலுவலர், செவிலியர், மருந்தாளுநர் மற்றும் சுகாதார ஆடீநுவாளர் உட்பட மொத்தம் 4000க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்ஆகியோர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் 92 நடமாடும் வெள்ள நிவாரண மருத்துவக் குழுக்களை பார்வையிட்டு மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார பணிகளை செம்மையாக மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்

இந்த மருத்துவக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நோய்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் அந்தந்த பகுதிகளில் குடிநீரில் குளோரின் அளவு சரிபார்த்தல், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்தல் மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வர்.
இந்நிகழ்ச்சியின்போது பொது சுகாதாரம் மற்றம் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் டாக்டர் கே. குழந்தைசாமி, கூடுதல் இயக்குநர் டாக்டர் வடிவேல், இணை இயக்கநர் சேகர் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்திருந்து மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.