கனமழைக்கு உயிரிழந்த 15 பேர் குடும்பங்களுக்கு ரூ 60 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

கனமழைக்கு உயிரிழந்த 15 பேர் குடும்பங்களுக்கு ரூ 60 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஞாயிறு, டிசம்பர் 20,2015,

வடகிழக்கு பருவ மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்தும் மழை வெள்ளத்தில் மூழ்கியும் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தி்ற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ 60 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்த கனமழையினால் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கனகம்மாசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபாலின் மகன் கோட்டீஸ்வரன்; பட்டாபிராம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷின் மனைவி ஜெயந்தி; டில்லிராஜாவின் மனைவி பூங்கொடி; குமரனின் மனைவி சந்தியா, பொன்னேரி வட்டம், அத்திப்பட்டு புதுநகர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கத்தின் மகன் ஜெகநாதன்; பொன்னேரி வட்டம், வேம்பேடு கிராமத்தைச் சேர்ந்த எல்லீஸின் மகன் மனோகரன்; விடையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பழனி; இருளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த டில்லி என்கிற டில்லிபாபுவின் மகன் அன்புச்செல்வன்; பூவிருந்தவல்லி வட்டம், தண்டுரை பட்டாபிராம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரின் மகன் யுவராஜ்; ஏழுமலையின் மகன் மணிவண்ணன்; பொன்னேரி வட்டம், மணலிபுதுநகர் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகன் தினகரன்; பொன்னேரி வட்டம், காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரின் மகன் சுந்தரமூர்த்தி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மகன் காசி; மோவூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜின் மகன் மகாலிங்கம்; பிரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜடாங்கியின் மகன் மணி ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.