பணியின்போது உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பணியின்போது உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வியாழன் , பெப்ரவரி 18,2016,

பணியின்போது உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
காவல் துறையின் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சூ.முருகேசன் (கடலூர் மாவட்டம்), ஆ.ஜெயராமன் (சேலம் மாநகர அரசு பொது மருத்துவமனை), சு.வெங்கட்ராமன் (திருவாரூர்-கோட்டூர்), ஆ.வடிவேல் (தருமபுரி-ஏரியூர்), சு.கோபால் (சென்னை மயிலாப்பூர்), உதவி ஆய்வாளர்கள் மு.நடராஜன் (நாமக்கல்-எலச்சிபாளையம்), செல்லதுரை (திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை), தலைமைக் காவலர்கள் சாமிதுரை (விழுப்புரம் சின்னசேலம்), தருமன் (நீலகிரி-தேனாடுகம்பை), இரண்டாம் நிலைக் காவலர் சு.ரமேஷ் (திருவண்ணாமலை- ஜமுனாமரத்தூர்) ஆகிய 10 பேர் உடல்நலக் குறைவால் இறந்தனர்.
சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் (சென்னை ஆவடி டேங்க் தொழிற்சாலை), தலைமைக் காவலர்கள் சு.புருஷோத்தமன் (திருவண்ணாமலை களம்பூர்), குமரேசன் (திருச்சி மாவட்ட குற்றப் பதிவேடுகள் கூடம்), இரண்டாம் நிலைக் காவலர் மு.சதீஷ் (சிவகங்கை நகரம்) ஆகிய 4 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.
இறந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.