பணியின்போது உயிரிழந்த 21 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பணியின்போது உயிரிழந்த 21 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வியாழக்கிழமை, மார்ச் 16, 2017,

சென்னை : மதுரை, திருச்சி, சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியின்போது உயிரிழந்த காவல்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என 21 பேரின் மறைவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடலூர் மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக, தனிப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த துரை;

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரபள்ளி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த நடராஜன்;

மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6-ம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த மணிகண்டன்;

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ராமகிருஷ்ணன்;

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கண்ணதாசன்;

அரியலூர் மாவட்டம், தூத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராஜராஜன்;

சேலம் மாநகரம், மாநகர ஆயுதப் படை, வாகனப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கண்ணன்;

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாத்தையங்கார் பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ரவிச்சந்திரன்;

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி போக்குவரத்துக் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த உமாபதி;

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலையத்திலிருந்து அயல் பணியில் பேரிகை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பால சுப்பிரமணியன்;

கிருஷ்ணகிரி மாவட்டம், ஹட்கோ காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கந்தசாமி;

மதுரை மாநகர், மதுரை போக்குவரத்து திட்டமிடல் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மகப்பூப் பாஷா;

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சுப்பிரமணியன்;

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சாமிநாதன்;

ஈரோடு மாவட்டம், கடத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சிவக்குமார்;

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராமசுப்பிரமணியன் ஆகிய காவல் துறை அலுவலர்கள் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், அத்திமூர் கிராமத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஹெல்பராக பணிபுரிந்த ராமஜெயம்;

திருப்பூர் மாவட்டம், பனிக்கம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாட்டர் மேனாக பணியாற்றி வந்த ராமசாமி;

திருநெல்வேலி மாவட்டம், பரிவிரிசூரியன் கிராமத்தைச் சேர்ந்த இலாங்கமணி மனைவி செல்லம்மாள்;

வேலூர் மாவட்டம், கடப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி;

தஞ்சாவூர் மாவட்டம், பெருமகளூர் தென்பாதி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட நிகழ்வுகளில் உயிரிழந்த 21 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.