பத்திரிகையாளர்களின் ஒய்வூதியம் உயர்வு முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: பத்திரிகையாளர்களின் ஒய்வூதியம் மற்றும் குடும்ப ஒய்வூதியம் ஆகியவை உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவி்த்துள்ளார்.  இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டபேரவையில் விதி எண் -110 கீழ் வெளியிட்ட அறிவி்ப்பு வருமாறு: “கத்தி முனையை விட பேனா முனை வலுவானது”” என்று பேரறிஞர் அண்ணா கூறினார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குபவர்கள் பத்திரிகையாளர்கள். காலம் நேரம் பாராமல் உழைக்கின்ற பத்திரிகையாளர்கள், தாங்கள் ஓய்வு பெறும் காலத்தில் மன நிறைவோடும், மன அமைதியோடும் வாழ்ந்திட வேண்டும் என்பதில் இந்த அரசு தனி அக்கறை கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் கடந்த 2011-ஆம் ஆண்டில் இவ்வரசு பொறுப்பேற்ற பின்பு பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இரண்டு முறை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளன. 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று நலிவுற்ற நிலையில் உள்ள பத்திரிகையாளர்களுக்குவழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஓய்வூதியம், 14.9.2011 முதல் 5,000 ரூபாய் முதல் ரூ6 ஆயிரமாகவும் , 7.10.2013 முதல் 6 ஆயிரத்தில் இருந்து 7,500 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் மறைந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த, குடும்ப மாதாந்திர ஓய்வூதியம் 14.9.2011 முதல் 2, 500 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும் 7.10.2013 முதல் 3, ஆயிரமாகவும் 4,500 ஆக உயர்த்தி வழங்கவு ம் ஆணையிடப்பட்டு, அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது.

எனினும் இன்றைய வாழ்க்கைச் சூழலைக் கருத்தில் கொண்டு, பத்திரிகையாளர் நலன் கருதி, அவர்களது ஓய்வு காலம் குறித்து ஓர் நம்பிக்கையும், இன்றைய வாழ்வின் மீது ஒரு பிடிப்பும் ஏற்படும் வகையில் இந்த ஓய்வூதியங்களை மேலும் உயர்த்தி வழங்க நான் முடிவெடுத்துள்ளேன். இதன்படி பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 7,500 ரூபாயிலிருந்து 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அதைப் போல, மறைந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் ரூ 4,500 லிருந்து 4, 750 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலி்தா அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.201509291516436442_RK-Nagar-constituency-The-establishment-of-a-Government-Arts_SECVPF.gif