பன்னீர்செல்வத்தின் பின்னணியில் தி.மு.க. உள்ளது : சசிகலா குற்றச்சாட்டு

பன்னீர்செல்வத்தின் பின்னணியில் தி.மு.க. உள்ளது : சசிகலா குற்றச்சாட்டு

புதன்கிழமை, பிப்ரவரி 08 , 2017, 

சென்னை  ; ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னணியில் தி.மு.க. இருப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா குற்றம் சாட்டினார்.

அதிமுக கழகப்பொதுச்செயலாளர் சசிகலா, போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, சென்னை மெரினா கடற்கரையில்,  ஓ. பன்னீர்செல்வம், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தது குறித்து விளக்கமளித்தார்.

அப்போது, ”அதிமுகவில் குழப்பம் இல்லை. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. தன்னை மிரட்டியதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியதில் உண்மை இல்லை. யாரும் அவரை முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு நிர்பந்திக்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் இணக்கத்தோடுதான் இருந்தார். சிலரின் தூண்டுதலின் பேரில்தான் அவர் இப்படிக் கூறியுள்ளார். ஓ. பன்னீர்செல்வம் பின்னணியில் திமுக உள்ளது. விரைவில் ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவார்” என்றார் சசிகலா.