பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர்

வியாழன் , பெப்ரவரி 04,2016,

காங்கிரஸ், பாரதிய ஜனதா, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். கேரளாவில் 50 ஆயிரம் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு இயங்கும் ஜனசேவா கேந்திர நிறுவனரும் கழகத்தில் சேர்ந்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை இன்று, சிவகங்கை மாவட்டம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோட்டையூர் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு C.T. சுரேஷ், கானாடுகாத்தான் பேரூராட்சி மன்றத் தலைவர் திரு. த. சிதம்பரம் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அப்போது, சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் திரு. P.R. செந்தில்நாதன் M.P. உடன் இருந்தார்.

கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் மணப்பாக்கம் திரு. M.N. மனோகரன் நேரில் சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை, கேரள மாநிலம், திருவனந்தபுரம் ஜனசேவா கேந்திரம் என்ற அமைப்பின் நிறுவனரும், 50 ஆயிரம் சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான திரு. J. சதீஷ்குமார், இடுக்கி மாவட்டம், சாந்தபாரா அல்மராய் குழுமத்தின் தலைவர் திரு. C. அப்துல்காதர் ஆகியோரும்;

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதளத் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. K. செல்வராஜும் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வுகளின்போது, கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சருமான திரு. S.P. வேலுமணியும் உடன் இருந்தார்.

கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை, புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் M.A.S. சுப்ரமணியன், புதுச்சேரி N.R. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. க. நடராசன், ரெட்டியார்பாளையம் வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு. M. சிவசங்கர், புதுச்சேரி வியாபாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு. S. பாலு என்கிற பாலசுப்பிரமணியம், புதுச்சேரி வணிகர் சங்கக் கூட்டமைப்பின் பொருளாளர் திரு. P. தங்கமணி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அப்போது, புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் திரு. பெ. புருஷோத்தமன் எம்.எல்.ஏ உடன் இருந்தார்.

தாயுள்ளத்தோடு தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு, தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை, கழகத்தில் இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.