பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிதி உதவி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிதி உதவி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஜனவரி 06,2016,

மின்சாரம் தாக்கியும், தேள் மற்றும் பாம்பு கடித்தும் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, தலா 3 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 39 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கடந்த நவம்பர் 11-ம் தேதி ஈரோடு மாவட்டம், பிசெட்டிபாளையம் வட்டம், கொளப்பலூர் கிராமத்தைச் சேர்ந்த . சென்னியப்பன்; நவம்பர் 21-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், மேட்டுப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த காமராஜ், டிசம்பர் 2-ம் தேதி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், உத்தமபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், டிசம்பர் 4-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டம், பாடிபுது நகரைச் சேர்ந்த . ரஞ்சன், ஆகிய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தொழிலாளர்கள் பணியிலிருக்கும் போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், நவம்பர் 6ம் தேதி விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ஊராங்கான கிராமத்தைச் சேர்ந்த கந்தன் என்பவரின் மகள் முத்துலட்சுமி தேள் கடித்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், நவம்பர் 20-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி அகிலாண்டம் பாம்பு கடித்ததில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், நவம்பர் 12 ம்தேதி மதுரை மாவட்டம், அவனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் முத்து, நவம்பர் 14-ம் தேதி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மூவர்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் நெடுமாறன், நவம்பர் 22-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், மருதக்குட கிராமத்தைச் சேர்ந்த சவரிமுத்து என்பவரின் மனைவி தாமஸ்மேரி, நவம்பர் 26ம் தேதி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் அருள், டிசம்பர் 17-ம் தேதி வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், அம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மனைவி ராமு, நவம்பர் 28-ம் தேதி, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கூடங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் மகன் ஜோதி மணிகண்டன், செல்ல நாடான் என்பவரின் மகன் பிரகாஷ், ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 13 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.