பாதிக்கப்பட்ட ஆர்.கே.நகர் பகுதிக்கு,அமைச்சர் விஸ்வநாதன் தலைமையிலும்,திருவொற்றியூர் பகுதியில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும் வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

பாதிக்கப்பட்ட ஆர்.கே.நகர் பகுதிக்கு,அமைச்சர் விஸ்வநாதன் தலைமையிலும்,திருவொற்றியூர் பகுதியில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலும் வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

ஞாயிறு, டிசம்பர் 06,2015,

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை மென்மேலும் துரிதப்படுத்தி வருகின்றனர். முதலமைச்சர் ஆணைப்படி நிவாரண உதவிகளும் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. மழைக்கால தொற்று நோய் பரவாமல் தடுக்க, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சையும் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டஆர்.கே.நகர் பகுதிக்கு அமைச்சர் விஸ்வநாதன் தலைமையிலும்,திருவொற்றியூர் பகுதியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் பொது மக்களுக்கு உணவுப் பொருள்கள், பாய், போர்வை, துணிகள், ரொட்டி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.