பாமக பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது

பாமக பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது

திங்கள் , பெப்ரவரி 22,2016,

பாமகவைச் சேர்ந்த வெங்கத்துார் ஊராட்சி மன்ற தலைவர் சுனிதாவை போலீசார் கைது செய்தனர்.

பாமக மாநில துணை தலைவர் திருவள்ளூர் பாலயோகி. இவரது மனைவி சுனிதா. இவர் வெங்கத்துார் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
இந்த பகுதியில், கடம்பத்துார் ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள் வசந்தகுமார், விக்னேஷ்,  நரேஷ் உள்ளிட்ட சிலர் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச பொருட்கள் வழங்க  டோக்கன்களை, அந்த பகுதி பொது மக்களிடம் வினியோகம் செய்துள்ளனர்.
தனது பகுதியில் அதிமுகவினர் இலவச பொருட்கள் வழங்க டோக்கம் வழங்குவதற்கு சுனிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வசந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில், சுனிதா உள்ளிட்ட 13 பேர் மீது மணவாள நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.