பாம்பு கடித்து இறந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.3 லட்சம் நிதி உதவி

பாம்பு கடித்து இறந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.3 லட்சம் நிதி உதவி

ஞாயிறு, ஜனவரி 03,2016,

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் பாம்பு கடித்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், திருநின்றவூர் கிராமம், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த முரளி என்வரின் மகன் கார்த்திக் என்பவர் பாம்பு கடித்ததில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 31.12.2015 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்த நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

பாம்பு கடித்து உயிரிழந்த கார்த்திக் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்த அன்னாரின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.