பாளையங்கோட்டை விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் முழு உருவச்சிலையை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

பாளையங்கோட்டை விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் முழு உருவச்சிலையை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

புதன், மார்ச் 02,2016,

பாளையங்கோட்டையில் 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நெல்லை சீமையில் வெள்ளையரை எதிர்த்து போரிட்ட பூலித்தேவனின் முதன்மை படைத் தலைவராக இருந்தவரும், நெற்கட்டும் செவல் பாளையத்திலும் மற்றும் வெள்ளையருக்கு எதிரான பல போர்களிலும் வீரப்போர் புரிந்தவரும், பூலித்தேவன் மறைவுக்குப் பிறகும் விடுதலைப் போரை தொடர்ந்து நடத்தி உயிர்த் தியாகம் செய்தவருமான விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவைப் போற்றும் வகையில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் என மொத்தம் 29 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இவை அனைத்தும் கட்டப்பட்டுள்ளன. இதனையடுத்து, மதுரை உலகத் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகம், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திரு. முக்கூர் என். சுப்பிரமணியன், திரு. K.T. ராஜேந்திரபாலாஜி, திரு.கே.சி. வீரமணி, அரசு தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அரசுத் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.