பா.ம.க.வின் ராமதாஸ்,இட ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் என்றைக்காவது பேசியது உண்டா? : படையாச்சியார் பேரவை கேள்வி

பா.ம.க.வின் ராமதாஸ்,இட ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் என்றைக்காவது பேசியது உண்டா? : படையாச்சியார் பேரவை கேள்வி

திங்கள் , பெப்ரவரி 01,2016,

பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், வன்னியர்களின் தனி இட ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் என்றைக்காவது பேசியது உண்டா? என படையாச்சியார் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாகவும், அப்பேரவை தெரிவித்துள்ளது.

படையாச்சியார் பேரவையின் மாநிலத் தலைவர் திரு. காந்தி, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு அவர் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். தனது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் எனத் தெரிவித்த ராமதாஸ், அதன்படி, நடந்ததுண்டா? என்பது உள்ளிட்ட கேள்விகளை கேட்டுள்ள திரு. காந்தி, வன்னியர்களின் இடஒதுக்கீடு குறித்து அன்புமணி ராமதாஸ், நாடாளுமன்றத்தில் எப்பொழுதாவது குரல் எழுப்பியதுண்டா? எனக் கேட்டுள்ளார். வரும், சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற தங்கள் இயக்கம் பாடுபடும் என்றும் திரு. காந்தி தெரிவித்தார்.