பினாமி என்னும் சொல்லுக்கு முழு தகுதி படைத்தவர் மு.க. ஸ்டாலின் : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

பினாமி என்னும் சொல்லுக்கு முழு தகுதி படைத்தவர் மு.க. ஸ்டாலின் : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு

திங்கள் , மார்ச் 28,2016,

பினாமி என்னும் சொல்லுக்கு முழு தகுதி படைத்தவர் மு.க. ஸ்டாலின் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வரும் சட்டமன்றத் தேர்தலோடு தி.மு.க. முடிந்துவிடும் என கூறினார். ஸ்பெட்ரம் ஊழல் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் தி.மு.க. கொள்ளையடித்திருப்பதாக குறிப்பிட்ட முத்தரசன், பினாமி என்ற சொல்லுக்கு முழு தகுதிபடைத்தவர் ஸ்டாலின்தான் எனவும் தெரிவித்தார்.