குடியரசு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள்:வெள்ள நிவாரண உதவிகளை விரைந்து வழங்கிய தமிழக அரக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

குடியரசு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள்:வெள்ள நிவாரண உதவிகளை விரைந்து வழங்கிய தமிழக அரக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

புதன், ஜனவரி 27,2016,

காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், அண்மையில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள நொச்சிலி, நெடியம், பாண்டவேடு உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. அப்பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி வரும் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சிறப்பான செயல்பாடுகள், சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இந்தக் கூட்டங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 225 கிராமங்களிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குட்டடப்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் திரு. பிரபாகர் பங்கேற்றார். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.