புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கழக நிர்வாகிகள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கழக நிர்வாகிகள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்

செவ்வாய், ஜனவரி 05,2016,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கழக நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜி. செந்தமிழன் எம்.எல்.ஏ., திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் எம்.எம்.பாபு (சென்னை மாநகராட்சி 142-வது வார்டு கவுன்சிலர்), திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் (தலைவர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

தேர்தல் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் பொள்ளாச்சி வி.ஜெயராமன் (துணை சபாநாயகர்), அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொறுப்பில் ப.மோகன் (ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் திருப்பூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத் தலைவர் திரு. உடுமலை கே. ராதாகிருஷ்ணன், தென் சென்னை தெற்கு மாவட்டக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. எம்.எம். பாபு ஆகியோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவைநேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.