மேட்டூரில் அதிமுக பிரச்சார வாகனம் மீது திமுகவினர் தாக்குதல் : ஓட்டுனர் செல்வராஜ் படுகாயம்

மேட்டூரில் அதிமுக பிரச்சார வாகனம் மீது திமுகவினர் தாக்குதல் :  ஓட்டுனர் செல்வராஜ் படுகாயம்

ஞாயிறு, ஏப்ரல் 24,2016,

சேலம் மாவட்டம், மேட்டூரில் அதிமுக பிரச்சார வாகனம் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலையை ஆதரித்து வாகன பிரச்சாரம் மேற்கொள்ளபட்டு வருகிறது. 

அதன்படி இன்று மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி வாகன பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த திமுகவினர், அதிமுக பிரச்சார வாகனத்தை வழிமறித்து திடீர் தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் வாகனத்தின் கண்ணாடிகள் நொறுங்கின. மேலும் பிரச்சார வாகனத்தின் ஓட்டுனர் செல்வராஜ் மீதும் திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இதில் காயம் அடைந்த அவர், மேட்டூர் அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக மேட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.