பெண்களின் வாழ்க்கை தரம் உயர தொடர் நடவடிக்கை:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, இல்லத்தரசிகளுக்கு உதவித் தொகையுடன் கலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

பெண்களின் வாழ்க்கை தரம் உயர தொடர் நடவடிக்கை:முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, இல்லத்தரசிகளுக்கு உதவித் தொகையுடன் கலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

 

21 November 2015

பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் 50 இல்லத்தரசிகளுக்கு பொம்மைகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பொம்மை தயாரிப்பதற்கான மூலப் பொருட்களும், பயிற்சி ஆணைகளும் வழங்கப்பட்டன.

பெண்களின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கும் அடிப்படையில், வீட்டில் இருந்தே அவர்கள் சுய தொழில் மேற்கொண்டு வருவாய் ஈட்டுவதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்து அவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சரின் உத்தரவின்பேரில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் 50 இல்லத்தரசிகளுக்கு காகிதக் கூழ் மூலம் பொம்மைகள் மற்றும் கலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டு 6 மாதகால பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை நிறைவுசெய்த 50 பேருக்கும், தஞ்சையில் நாதஸ்வர சீவாளி தயாரிக்கும் பயிற்சி பெற்ற 10 பேருக்கும் பயிற்சி சான்றிதழ்கள் மற்றும் மூலப் பொருட்களை அமைச்சர் திரு.T.P.பூனாட்சி, அரசு தலைமை கொறடா திரு.ஆர்.மனோகரன் ஆகியோர் வழங்கினர். பயிற்சிகாலத்தில் இவர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் மூலப்பொருட்கள் வழங்கப்பட்டன. பயிற்சி முடிந்த பின்னர் மகளிர் தயாரிக்கும் பொம்மைகள் மற்றும் கலைப் பொருட்களை பூம்புகார் நிறுவனமே கொள்முதல் செய்யவிருக்கிறது. தங்களுக்கு இத்தகைய வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தித் தந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பெண்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.