பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா:தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

பெண்கள் நலனில் அக்கறை கொண்டவர் முதல்வர் ஜெயலலிதா:தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

திங்கள் , பெப்ரவரி 22,2016,

பெண்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரே தலைவிமுதலமைச்சர் ஜெயலலிதா மட்டும் தான்  என்று ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் விழாவில் அமைச்சர். கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

முதலமைச்சர்ஜெயலலிதா  சிறப்பு திட்டத்தின் கீழ் சிவகாசி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் திருமாங்கல்ய தங்கம்வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் .சி.முத்துக்குமரன் தலைமையில் விருதுநகர்மாவட்டம், திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில்நேற்று  நடைபெற்றது.இவ்விழாவில் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்.கே.டி.ராஜேந்திரபாலாஜி 10-ம் வகுப்பு வரை படித்த 163 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம்வீதமும், பட்டப்படிப்பு படித்த 1 பயனாளிக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதமும் மொத்தம் 164 பயனாளிகளுக்குரூ.41 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான திருமண உதவித் தொகையினையும், திருமாங்கல்யத்திற்கு தலா4 கிராம் தங்கம் வீதம் ரூ.16 லட்சத்து 01 ஆயிரத்து 132 மதிப்பிலான 656 கிராம் தங்கத்தினையும் ஆகமொத்தம் ரூ. 57 லட்சத்து 26 ஆயிரத்து 132 மதிப்பிலான திருமணத்திற்கு நிதி உதவி மற்றும்திருமாங்கல்ய தங்கத்தினை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதிஉதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் ஏழை, எளிய பெண்களின்திருமணத்திற்காக 4 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவியினை வழங்கி வருகிறார்கள். தங்கத்தைவெட்டி எடுக்கும் பெல்ஜியம் நாட்டில் கூட தங்கத்தினை விலையில்லாமல் வழங்கவில்லை. ஆனால் ஏழைஎளிய மக்களின் நலனுக்கான உழைக்கும் தங்கத்தாரகை முதலமைச்சர் ஜெயலலிதா பெண் கல்வியினை ஊக்குவிக்கும் வகையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.25,000-மும்,பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000-ம் திருமண நிதியுதவியுடன் சேர்த்து 4 கிராம்திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கி வருகிறார்கள்.

ஏழைப் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்தின் போது குண்டு மணி தங்கம்கூட இல்லாத காரணத்தால் மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கை கட்டி திருமணம் செய்தார்கள். வசதிபடைத்தவர்களை போன்று ஏழை, எளிய பெண்களும் தாலிக்கு தங்கத்தை அணிய வேண்டும் என்றுதாயுள்ளத்தோடு  முதலமைச்சர் ஜெயலலிதா  திருமண நிதி உதவியுடன்திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கத்தை வழங்கி வருகிறார்கள். பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றம்அடைய வேண்டும் என்றும் பெண்களுக்கான சீர்மிகு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.தமிழக மக்களின் துன்பத்தை தன் துன்பம் போல் எண்ணி, அவர்களது இன்பத்தை தன் இன்பம்என எண்ணி மக்களுக்காக வாழும் ஒரே தலைவி முதலமைச்சர் அம்மா தான். அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில் எந்த சூழ்நிலையிலும் நாம் அவர்; பின்னால் நன்றிக்கடன்பட்டவா;களாக இருக்க வேண்டும் எனசெய்தி மற்றும் சிறப்பு  திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  தெரிவித்தார்.