பெருந்தலைவர் காமராஜரின் 115வது பிறந்த நாள் விழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 115வது பிறந்த நாள் விழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை

ஜூலை ,16 ,2017 ,ஞாயிற்றுக்கிழமை, 

சென்னை : பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பெருந்தலைவர் காமராஜரின் 115-வது பிறந்த நாள் விழா நேற்று மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தமிழக அரசு சார்பில் சென்னையில் காமராஜர் சாலையில் (கடற்கரை சாலை) கலங்கரை விளக்கம் அருகே உள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அதைச் சுற்றி மலர் மாலைகளால் அலங்கரித்தும் வைத்திருந்தனர்.நேற்று காலை அங்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.