பேரறிஞர் அண்ணாவின் 47-வது ஆண்டு நினைவு தினம் :அண்ணா திருவுருவப்படத்திற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி அஞ்சலி

பேரறிஞர் அண்ணாவின் 47-வது ஆண்டு நினைவு தினம் :அண்ணா திருவுருவப்படத்திற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா மலர்தூவி அஞ்சலி

புதன்கிழமை, பிப்ரவரி 03, 2016,

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 47-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெ ஜெயலலிதா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் , சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில், காலை 10.30 மணியளவில், அ.இ.அ.தி.மு.க. அவைத்தலைவர் திரு. இ. மதுசூதனன் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கழகத்தின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும், பெருந்திரளான தொண்டர்களும் பங்கேற்று, மலர் அஞ்சலி செலுத்தினர்.