பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் சிரமமின்றி ஊர் திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயணிகள் நன்றி

பொங்கல் பண்டிகை முடிந்து  மீண்டும் சிரமமின்றி ஊர் திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயணிகள்  நன்றி

திங்கள் , ஜனவரி 18,2016,

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வகையில், நான்காம் நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், சிரமமின்றி தாங்கள் ஊர் திரும்ப முடிகிறது என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், சென்னையிலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கும், மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்தும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் கடந்த 9-ம் தேதிமுதல், 14ம் தேதி வரை 12 ஆயிரத்து 624 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் எவ்வித சிரமமும் இன்றி, ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் சென்று தங்கள் சொந்தங்களுடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடினர். பொங்கல் பண்டிகையை கொண்டாடும் பொதுமக்கள், மீண்டும் ஊர் திரும்பும் வகையில், கடந்த 15ம் தேதி முதல், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 3ம் நாளாக நேற்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நாளை வரை மொத்தம் 12 ஆயிரத்து 624 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.