பொங்கல் பரிசுத் தொகுப்பு : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கிவைத்தார்

பொங்கல் பரிசுத் தொகுப்பு  : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கிவைத்தார்

செவ்வாய், ஜனவரி 10,2017,

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கிவைத்தார்.

குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ளோர், முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் என 1.8 கோடி குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியன அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகிறது.இதற்காக ரூ.200 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் வைப்பதன் அடையாளமாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 14 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், கூட்டுறவு- உணவு- நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.