பொதுமக்கள் மட்டுமல்லாது, விலங்குகள் நலனிலும் அக்கறை செலுத்தும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு யானைகளை பார்வையிட வந்த சுற்றுலாப் பயணிகள் பாராட்டு

பொதுமக்கள் மட்டுமல்லாது, விலங்குகள் நலனிலும் அக்கறை செலுத்தும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு யானைகளை பார்வையிட வந்த சுற்றுலாப் பயணிகள் பாராட்டு

ஞாயிறு, ஜனவரி 10,2016,

யானைகள் நலவாழ்வு முகாமிற்கு வந்துள்ள யானைகளை சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் மட்டுமல்லாது, விலங்குகள் நலனிலும் அக்கறை செலுத்தும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சுற்றுலாப் பயணிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் சார்பில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிற்கிணங்க, ஆண்டுதோறும் யானைகள் நல்வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள தேக்கம்பட்டி பகுதியில் கடந்த 7-ம் தேதி முதல் யானைகள் முகாம் நடைபெற்று வருகிறது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலிருந்து, திருக்கோயில் மற்றும் மடங்களைச் சேர்ந்த 30 யானைகள் பங்கேற்றுள்ளன. இந்த முகாமில் யானைகள் மற்றும் அவற்றின் பராமரிப்பாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான யானை சூலிகாம்பாள், முகாமிற்கு செல்லமுடியாத காரணத்தால், திருக்கோயில் மடத்திலேயே தேவையான சத்தான உணவுகள், பழங்கள், ஆயுர்வேத மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

யானைகளுக்கு பொதுமக்களால் இடையூறு ஏற்பட கூடாது என்பதால், குறிப்பிட்ட தூரத்திலிருந்து யானைகளை பார்க்க மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யானைகளின் நடமாட்டம், அவை கூட்டமாக ஒரே இடத்தில் நிற்பது ஆகிய காண்பதற்கரிய காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர். யானைகள் முகாம் காரணமாக இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

மக்கள் நலனில் மட்டுமின்றி, விலங்குகள் நலனிலும் பெரிதும் அக்கறை செலுத்தும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சுற்றுலாப் பயணிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.