பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல்பேருந்துகள் இயக்கம் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை:முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி

பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல்பேருந்துகள் இயக்கம் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை:முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி

வெள்ளி, டிசம்பர் 04,2015,

சென்னை,
சென்னை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக பொதுமக்களின் வசதிக்காக வெளியூர் செல்லும் பயணிகள் சிரமமின்றி தங்கள் ஊர் திரும்ப ஏதுவாக கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதன் அடிப்படையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதை போக்குவரத்துறை அமைச்சர் பி.தங்க மணி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேரில் ஆய்வு செய்து பயணிகளை பேருந்துகளில் ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், வெளியூர் செல்லும் தனியார் (ஆம்னி) பேருந்துகளிலும் பொது மக்கள் பயணிக்க ஏதுவாக, அரசுப் பேருந்து கட்டணத்திலேயே பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு போக்கு வரத்துறை அமைச்சர் நேரில் அறிவுறுத்தி, பயணிகளை இரவு முழுவதும் அனுப்பி வைத்தார்.இதனால், வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் நிம்மதி யாக தங்கள் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். கூடுதல் பேருந்துகளை இயக்க உத்தரவிட்ட முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி தெரி வித்தனர்.