பொது நிவாரண நிதிக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இதுவரை ரூ.195 கோடி வழங்கப்பட்டுள்ளது

பொது நிவாரண நிதிக்கு முதலமைச்சர்   ஜெயலலிதாவிடம் இதுவரை ரூ.195 கோடி வழங்கப்பட்டுள்ளது

புதன், டிசம்பர் 30,2015,

தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக பல்வேறு நிறுவனங்களும், தனி நபர்களும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.195 கோடியே 43 லட்சத்து 61 ஆயிரத்து 563 வழங்கியுள்ளனர்.

அந்த வரிசையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை செவ்வாய்க்கிழமை (29.12.2015) தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.

1.மக்களவை துணைத் தலைவர் எம். தம்பிதுரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் பி.வேணுகோபால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவைத் குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான 24 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ப. தனபால், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சரும், அவை முன்னவருமான .ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன், அரசு தலைமைக் கொறடா ஆர்.மனோகரன் ஆகியோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பேரவைத் தலைவர், மாண்புமிகு பேரவை முன்னவர், பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா ஆகியோரின் ஒரு மாத சம்பளத் தொகையான 75 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்.

3. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.சந்திரசேகரன் 10 கோடி ரூபாய்.

4. அப்பல்லோ மருத்துவமனைகளின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி 3 கோடி ரூபாய்.

5. சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா 3 கோடி ரூபாய்.

6. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பி. அசோக், நிறுவன மேலாண்மை இயக்குநர் கௌதம் ராய், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் யு.வி. மன்னூர், சிபிசிஎல் நிறுவனத்தின் இயக்குநர் (நிதி) .எஸ். கிருஷ்ண பிரசாத் ஆகியோர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 3 கோடி ரூபாய், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான 44 லட்சத்து 32 ஆயிரத்து 486 ரூபாய், சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பில் 1 கோடி ரூபாய், சிபிசிஎல் நிறுவன பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான 32 லட்சத்து 72 ஆயிரத்து 560 ரூபாய், என மொத்தம் 4 கோடியே 77 லட்சத்து 5 ஆயிரத்து 46 ரூபாய்.

7. தி நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜி. ஸ்ரீநிவாசன் 3 கோடி ரூபாய்.

8. மாலை முரசு நாளிதழின் இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் 1 கோடி ரூபாய் வழங்கினர்.