போயஸ்தோட்ட இல்லம் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

போயஸ்தோட்ட இல்லம் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

வியாழக்கிழமை, பிப்ரவரி 09, 2017,

சென்னை ; சென்னையிலுள்ள போயஸ் தோட்ட இல்லம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதுதொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்ட இல்லம் அவரின் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே நான் முதல்வராகப் பொறுப்பு ஏற்பேன் என்று அப்போது அவர் கூறினார்.