போலி மருத்துவர்களை ஒழிக்க வேண்டும் ; மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

போலி மருத்துவர்களை ஒழிக்க வேண்டும் ; மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

வெள்ளி, நவம்பர் 25,2016,

தமிழகத்தில் போலி மருத்துவர்கள் ஒழிப்பில் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மருத்துவ மற்றும் ஊரக நலப் பணித்துறை இணை இயக்குநர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை வளாகத்தில் உள்ள டி.எம்.எஸ் வளாகக் கூட்டரங்கில்  நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தாய்மார்கள் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களை குறைக்க உதவும் சீமாங் மையங்கள், பழங்குடியினருக்கான மருத்துவ சேவைகள், போதை மறுவாழ்வு மையங்கள், மாவட்ட நலத்திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது:

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தகுதியற்ற போலி மருத்துவர்களைக் கண்டறிந்து அவர்களை ஒடுக்கும் நடவடிக்கை காலத்தின் கட்டயாமாகும். எனவே, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர்கள் காவல் துறையுடன் இணைந்து போலி மருத்துவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் கே.செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.